திருச்சிராப்பள்ளி

Nodes

திருச்சிராப்பள்ளி

உயர் அழுத்த கொதிகலன்களை உற்பத்தி செய்யும் முக்கிய தொழில் அலகுகளில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளதாலும், பெல்லை ஆதரிக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன அலகுகள் (MSMEs) அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும் திருச்சிராப்பள்ளி ‘கட்டுருவாக்கம் மற்றும் கொதிகலன் தலைநகரம்’ (Fabrication and Boiler capital of India) என்று அழைக்கப்படுகிறது. பெல்லுடன் ஆயுத தொழிற் சாலை, ரயில்வே பணிமனை மற்றும் டால்மியா சிமெண்ட்ஸ் போன்ற இதர பொதுத்துறை நிறுவனங்கள் மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மாவட்டத்தில் துவாக்குடி, அரியமங்கலம், திருவெறும்பூர் தொழிற்பேட்டைகளைச் சுற்றி ஏராளமான சிறுதொழில்களும் உள்ளன. மதுரை சாலையில் உள்ள தொழில்துறை புறநகர்ப் பகுதியாக கருதப்படும் விராலிமலையில் டிவிஎஸ், இந்தியா பஸ் பாடி பில்டிங் யூனிட், செதார் வெசல்ஸ், எம்எம் ஃபோர்கிங்ஸ் தொழிற்சாலைகள் (TVS, India bus body building unit, Cethar Vessels, MM Forgings) உள்ளன.
திருச்சிராப்பள்ளி இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கிளஸ்டர் (ட்ரீட்) என்பது ஒரு தனியார் தொழில் கிளஸ்டரால் வெற்றிகரமாக நடத்தப்படும் பொது வசதி மையமாகும் (CFC). எந்திரம் மூலம் பெரிய வேலைகளை துல்லியமாக செய்வதற்கும் மற்றும் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிற்துறை (OEMs) மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்காக பல பணிகளைச் செய்து வருகிறது.

இணைப்பு

சாலைகள்
சாலைகள்
இரயில்வே
திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம்
விமான
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்
துறைமுகங்கள்
சென்னை துறைமுகம் மற்றும் கடலூர் துறைமுகம்

கல்வி நிறுவனங்கள்