சேலம்

Nodes

சேலம்

சேலம் ஸ்டீல் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ (Salem Steel and JSW) எஃகு ஆலைகளுக்கு மிகவும் பிரபலமானது, சேலத்தில் பருத்தி ஜவுளிதொழில் வகையிலும் அதிகபட்ச எண்ணிக்கை அலகுகள் உள்ளன. பருத்தி ஜவுளி வகைகளுக்குப் பிறகு, குறு மற்றும் சிறு தொழில்களில் அதிகபட்ச வேலைவாய்ப்புகள் வேளாண்மை சார்ந்த தொழில்களாகும்.

சேலம் இரும்பு உருக்கு ஆலை (Salem Steel Plant) என்பது இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு குளிராக உருட்டப்பட்ட துருப்பிடிக்காத எஃகு மற்றும் சூடாக உருட்டப்பட்ட துருப்பிடிக்காத எஃகு / கார்பன் எஃகு ஆகியன உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் மண்டலத்தில் தமிழ்நாட்டில் அதிக அளவில் சவ்வரிசி உற்பத்தி செய்யும் சவ்வரிசி ஆலைகளும் உள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 34,000 ஹெக்டேர் நிலம் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு, மரவள்ளி பதப்படுத்தும் தொழிலில் 650 அலகுகள் இயங்கி வருகின்றன.

இந்த மாவட்டத்தில் பாக்சைட், சுண்ணாம்புக்கல், குவார்ட்ஸ், பெல்ஸ்பார் மற்றும் கிரானைட் போன்ற கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு மேக்னசைட் (TANMG), மாநில அரசு நிறுவனம், பர்ன் ஸ்டான்டர்டு, மத்திய அரசு நிறுவனம் மற்றும் டால்மியா மேக்னசைட் (Tamil Nadu Magnesite (TANMAG), a State Government organization, Burn Standard, a Government of India organization and Dalmia Magnesite) ஆகியன சேலம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பெருநிறுவனங்களாகும். வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த மெட்ராஸ் அலுமினிய நிறுவனம் (மால்கோ) மேட்டூரில் அலுமினிய உற்பத்தித் தொழிலை செய்துவருகின்றது.

இணைப்பு

சாலைகள்
சாலைகள்
இரயில்வே
சேலம் இரயில் நிலையம்
விமான
சேலம் உள்நாட்டு விமான நிலையம் & கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம்
துறைமுகங்கள்
சென்னை துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகம்

கல்வி நிறுவனங்கள்