இந்திய பாதுகாப்புக் வழித்தடம் மற்றும் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பில் தமிழ்நாடு தலைமை வகிக்கிறது. “இந்த கூட்டாண்மை முப்பரிமாண (3டி) வடிவமைப்பு மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதின் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மேம்படுத்தும் மற்றும் இத்தொழில்களில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ‘டசால்ட் சிஸ்டம்ஸின்’ (Dassault Systems) இந்தியாவின் நிர்வாக இயக்குனர் தீபக் என்.ஜி கூறினார். "டான்காம் (TANCAM) நாட்டில் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வளப்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இதேபோன்ற சிறப்பு மையங்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளோம். நிகழ்கால மற்றும் எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கும் டிட்கோ (TIDCO) உடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
Deepak NG
Managing Director,
Dassault Systemes India