தமிழ்நாட்டில், சுங்க வசதியுடைய பன்னாட்டு விமான நிலையங்கள் நான்கு உள்ளன. தற்போது தனியார் துறையின் மிகப்பெரிய எம்ஆர்ஒ (MRO) (பராமரிப்பு, பழுது நீக்கம் மற்றும் செயல்பாடுகள்) ஒன்று ஓசூரில் இயங்கி வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும். விமான நிறுவனங்களின் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் எம்ஆர்ஒ MRO (பராமரிப்பு, பழுது நீக்கம் மற்றும் செயல்பாடுகள்) வசதியை ஏற்படுத்த TIDCO திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக, சென்னையில் தங்களுடைய வசதிகளை நிறுவுவதற்கு TIDCO தற்போதுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச எம்ஆர்ஒ MRO (பராமரிப்பு, பழுது நீக்கம் மற்றும் செயல்பாடுகள்) நிறுவனங்களை அணுகும்.
இதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் எம்ஆர்ஒ (MRO) (பராமரிப்பு, பழுது நீக்கம் மற்றும் செயல்பாடுகள்) வசதியினை ஆதரிக்கும்பொருட்டு ஊக்குவிப்பு கொள்கைகளை வழங்கியுள்ளன.