தொழிற்சாலைப் பதிவு

தொழிற்சாலைப் பதிவு

இந்த வழித்தடத்தில் அனைத்து கூறுகளிலும், திறன்பிரிவுகளிலும் தொழிற்சாலைகள் பரவியுள்ளன. ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு OEMகள் டாண்டிகோவின் ஒரு பகுதியாகும். மேலும், தமிழ்நாடு அல்லது வெளி மாநிலங்களில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பங்கேற்பினால் இந்த வழித்தடத்தை வலுப்படுத்தி வருகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) இந்தப் பாதையின் முதுகெலும்பாக விளங்குகின்றன, மேலும் அவை பரந்த அளவில் சர்வதேச அளவிலான திறன்களைப் பூர்த்தி செய்கின்றன. பல்வேறு ஆயுத அமைப்புகளின் பகுப்புக்கள் மற்றும் துணை அமைப்புகளுக்கான பாகங்களை உற்பத்தி செய்வதற்கான திறமை மற்றும் கொள்திறனைக் கொண்டுள்ளன. டாண்டிகோவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளின் இடைவிடா முயற்சியாதெனில், உள்நாட்டுமயமாக்கலை உறுதி செய்வதோடு, நாட்டை பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடையச்செய்வதே ஆகும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை குறிக்கோள் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியில் தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகும். மேலும் திருத்தப்பட்ட மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட “மேக் II” நடைமுறை இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு(MSME) சில சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Industry Partners

Industry Body Partners