உதான் திட்டத்தின்(UDAN) கீழ் அல்லது மாநிலத்தில் இயங்கி வரும் தனியார் இயக்குநர்களால், மாநிலத்திற்குள் பல இடமைவுக்கு இடையேயான அதிநவீன-மண்டல ஹெலிகாப்டர் சேவைகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அதிநவீன -மண்டல இணைப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) TIDCO முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஹெலிகாப்டர் இணைப்பை நிறுவுவதற்கும் அல்லது போக்குவரத்து நெரிசலுள்ள மாநகர/ நகரங்களுக்கு இடையே இலகுரக விமானங்களைப் பயன்படுத்துவதற்கும் கொள்கை ஆதரவு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) TIDCO பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் தற்போதைய மண்டல இணைப்புத் திட்டத்தல் (RCS) உள்ள இடைவெளிகளை ஈடுசெய்யவும், RCS-UDAN இன் நீட்டிப்பாகவும், கூடுதல் சலுகைகள் மற்றும் வழித்தடங்களுக்கான நிதி உதவி (VGF) வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஹெலிகாப்டர் இயக்கத்தை சாத்தியமானதாக்கி, தடையற்ற மற்றும் திறன்மிகு ஹெலிகாப்டர் சேவைகளை வழங்கிட இந்த திட்டம் முன்நோக்குகிறது. ஹெலிகாப்டர் இயக்கத்திற்குண்டான உள்கட்டமைப்பிற்கான ஆதரவையும் இத்திட்டம் வழங்கிடும். மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து எளிதில் போகமுடியாத இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் செல்வதற்கான புதிய வாய்ப்புகளையும் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் அதி நவீன -மண்டல வான் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவது வலுவான உட்போக்குவரத்து முறையை உருவாக்கிடும். அதனால் இது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான தரைவழிப் போக்குவரத்தை பூர்த்தி செய்திடும் வகையில் அமைந்திடும். திட்டமிடப்பட்டுள்ள அதிநவீன பிராந்திய விமான இணைப்புத் திட்டம், தளவாட உற்பத்தியாளர்களுக்கு பயனளித்து உள்ளூர் உற்பத்தித் தொழிலை ஊக்குவிக்கும்.