2010 இல், சுமார் 79 மில்லியன் மக்கள் இந்தியாவிலிருந்து வர/செல்ல அல்லது இந்தியாவிற்குள்ளேயே பயணம் மேற்கோண்டனர். அது 2017ல் 158 மில்லியனாக இரட்டிப்பாகியது. சர்வதேச விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பு 2030ஆம் ஆண்டு காலண்டர் ஆண்டுக்குள் 6 மில்லியன் விமானங்களின் இயக்கத்தின் மூலம் 300 மில்லியன் பயணிகளின் புறப்பாடுகள் நடைபெறும் என்று மதிப்பிடுகிறது. இது 2037ஆம் ஆண்டில் 520 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டுக்குள் கையாளப்பட்ட மொத்த விமானச் சரக்கு 3.56MMT ஐ எட்டியது. 2032 ஆம் ஆண்டுக்குள் 11.4 MMT ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியா பசிபிக் வான்பயணவியல் (ஏவியேஷன்) மையம் நடத்திய ஆய்வின்படி, 2017 ஆம் ஆண்டில் நாட்டில் விமானிகளின் எண்ணிக்கை சுமார் 8000 ஆக இருந்தது எனவும் மற்றும் 2028 ஆம் ஆண்டுக்குள் சுமார் 22000 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விமானிகளின் ஓய்வு மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இதன் தேவை பத்து ஆண்டுகளில், சுமார் 18000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளில் கடுமையான பற்றாக்குறை உள்ளதன் காரணமாக, இந்தியாவில் விமான பயிற்சி மையம் (எஃப்டிஓ-கள்) (FTOs) எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாட்டில் பயிற்சி பெற்ற விமானிகளின் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு சுமார் 600-ஆக இருந்து வருகிறது. வெளி நாடுகளில் பயிற்சி பெற்ற விமானிகளைக்கொண்டு இந்த இடைவெளி நிவர்த்தி செய்யப்படுகிறது.
செப்டம்பர் 2020 இல் இந்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் கொள்கையின் ஒரு பகுதியாக, உள்நாட்டில் பயிற்சி பெற்ற விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, தாராளமயமாக்கப்பட்ட விமான பயிற்சி மையம் (Flying Training Organisation -FTO) கொள்கையை மத்திய அரசு 2020 செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது. பற்றாக்குறையை சமாளிக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 20 புதிய (FTO) (எஃப் டி ஓ) க்களை நாட்டில் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
இதன் தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதிகள் அடங்கிய விமான ஓடுதளங்களில் இருந்து எஃப்டிஓ-க்கள் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தின் (டிஎன்டிஐசி) ஒரு பகுதியாகும். இது நாட்டின் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிற்துறையின் உற்பத்தி மற்றும் சேவைத் தேவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.