இச்சிறப்பு மையங்கள் நான்காவது தொழில் புரட்சி தொழிற்சாலைகள் (Industry 4.0), பாதுகாப்பு மற்றும் விமான மின்னணுவியல், தொழிற்துறை இணையம், கூடுதல் உற்பத்தி, முப்பரிமாண அச்சு (3D பிரிண்டிங்), எந்திரனியல் (ரோபோடிக்ஸ்) போன்ற துறைகளில் வளர்ந்து வரும் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை, தொழிற்சாலைகள் பின்பற்ற உதவும் வகையில், வடிவமைப்பு, தயாரிப்பு மேம்பாடு, உற்பத்தி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (மேம்பாடு) ஆகியவற்றுக்கான உகந்த தளங்களாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.