A&D Park

வான்வெளி மற்றும் பாதுகாப்பு (A&D) பூங்காக்கள்

வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை (A&D) தொழில்துறை பூங்காக்களை உருவாக்குவதன் நோக்கம், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் (A&D) துறையுடன் தொடர்புடைய புதிய தொழில்துறை வசதிகளை விரிவுபடுத்தவும் அல்லது புதிதாக தொழிற்தொடங்க திட்டமிடும் நிறுவனங்களுக்கு ஆரம்பித்தவுடனேயே திறனுடன் செயல்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதற்கும் ஆகும். இந்தத் பூங்காக்களில் தேவையான அனைத்து பொதுவான வசதிகளும் இருக்குமென்பதால் இத்தொழில் பூங்காக்கள் வணிகத்தை எளிதாக்குவதற்கான திட்டமுறைகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

வரிசை எண் தொழிற்பூங்கா உத்தேசிக்கப்பட்டுள்ள துறை
1 விண்வெளிப் பூங்கா, வல்லம், வடகல் ஏ&டி (ஆர்&டி மற்றும் உற்பத்தி)
2 சூலூர் ராணுவ விமானக் கூடம்
3 வரப்பட்டி (கோயம்புத்தூர் அருகே ஓர் கிராமம்) பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி பூங்கா
4 அன்னூர் இரட்டை பயன்பாட்டு தொழில் பூங்கா
5 மணலூர் பாதுகாப்பு மின்னணுவியல்
6 ஓசூர் விமான பாகங்கள்
7 திண்டிவனம் (கட்டம் II) ஹெலிகாப்டர் எம்ஆர்ஓ( MRO )
8 தூத்துக்குடி விண்வெளி தொழில் பூங்கா